தேவி நீயே துணை
பல்லவி
தேவி நீயே துணை
தென்மதுரை வாழ் மீனலோசனி
அநுபல்லவி
தேவாதி தேவன் சுந்தரேசன்
சித்தம் கவர் புவன சுந்தரி - அம்பா… (தேவி..)
சரணம்
மலையத்வஜன் மாதவமே
காஞ்சன மாலை புதல்வி
மகாராணி
அலைமகள் கலைமகள் பணிகீர்வாணி
அமுதனைய இனிய முத்தமிழை வளர்த்த… (தேவி..)