தீம் தீம்
பல்லவி
தீம் தீம் என நடனம் ஆடி வருவாய் நர்த்தன கணபதியே
தத்தீம் தத்தீம் என நடனம் ஆடி வருவாய் நர்த்தன கணபதியே
அனுபல்லவி
ஜம் ஜம் என மாலைகள் ஆட
ஸ்ருதி லயமுடன் மாந்தர்கள் பாட
நான் உன்னை ஆனந்தமாக
காண வேண்டுமே கணநாதா
தாம் தஜம் தனம் ததிங்கினதோம்
தாம் தகனம் தகரும் ததீங்கினதோம்
தாம்தரி நம்தரி ஜம்தரி தகஜனு
ததிகிடதோம் ததிகிடதோம் ததிகிடதோம்
சரணம்
தும்பிக்கை எடுத்து உயர்த்தி நிறுத்தி
கஜமுகனே நீ அருள் மழை பொழிவாய்
சங்கரன் மைந்தனே சங்கடம் நீக்கிட
பதமலர் பணிந்திடுவேன் கஜராஜா
தாம் தஜம் தனம் ததிங்கினதோம்
தாம் தகனம் தகரும் ததீங்கினதோம்
தாம்தரி நம்தரி ஜம்தரி தகஜனு
ததிகிடதோம் ததிகிடதோம் ததிகிடதோம்