காணக் கண்ணாயிரம் வேண்டும்

சந்தனமும் ஜவ்வாதும் சேர்ந்து மணம்கமழ
பாலபீஷேகமுடன் நெற்றிதிருநீர் அணிந்து
பக்தர்ப்படை சூழ்ந்துவர தங்கரத தேரினிலே
வள்ளி தெய்வானையுடன் காட்சிதரும்\

உன்னழகைக் காண… உன்னைக் காண
முருகனைக் காண ஆயிரம் கண் வேண்டும்
உன்னைக் காணக் கண்ணாயிரம் வேண்டும்\

குமரனைக் காண… உன்னைக் காண
முருகனைக் காண ஆயிரம் கண் வேண்டும்
உன்னைக் காணக் கண்ணாயிரம் வேண்டும்\

குமரனைக் காண ஆயிரம் கண் வேண்டும்
முருகா…

உலகளந்த வல்லவனை வண்ண மயில் வாகனனை
கணபதி சகோதரனை தகப்பன்ஸ்வாமி ஆனவனை
(காண…)

செங்கதிரும் முழுமதியும் சேர்ந்தமைந்த சுந்தரனை
விண்ணகமும் மண்ணகமும் காத்துநிற்கும் அருளவனை
(காண…)

குமரனைக் காண கந்தனைக் காண
வடிவேலனைக் காண சரவணனைக் காண
கார்த்திகேயனைக் காண சிவபாலனைக் காண
பழனிமுருகனைக் காண குகனைக் காண
அழகனைக் காண ஆயிரம் கண் வேண்டும்.

முருகா…
குமரா….