கருணை தெய்வமே கற்பகமே
பல்லவி
கருணை தெய்வமே கற்பகமே
காண வேண்டும் உந்தன் பொற்பதமே - என்
அனுபல்லவி
உறுதுணையாகவென் உள்ளத்தில் அமர்ந்தாய்
உனையன்றி வேறே யாரோ என் தாய்
சரணம்
ஆனந்த வாழ்வு அளித்திடல் வேண்டும்
அன்னையே என் மேல் இரங்கிடல் வேண்டும்
நானும் உன்னை தொழுதிடல் வேண்டும்
நலமுடன் வாழ அருளல் வேண்டும்.