கைலை வாசனே
கைலை வாசனே அருள் காசி நாதனே
கையில் கபாலம் ஏந்தும் மயிலை ஈசனே
காஞ்சி ஏகனே திருக்கடவூர் தேவனே
கருணையோடு மார்க்கண்டனை காத்த ஈசனே..திருநின்றவா திருப்பாடலீஸ்வரா
திருப்பதிகை நாவுக்கரசைக் காத்தவா
தில்லைக் கூத்தனே சிவகாமி நேசனே
திருக்குன்று பதிவாழும் சிவலோகனே
(கைலை…)ஆரூரரசே மனுநீதி காத்தவனே
ஆலங்காட்டானே திருநீலகண்டனே
அமுதுண்டிட திருவெண்காட்டான்குடியில்
திருத்தொண்டரின் பிள்ளைக்கறி கேட்டவா
(கைலை…)ஆலவாயனே மாடல் கூடல் நின்றவா
அங்கையர்க்கண்ணி மகிழ ஆடல் செய்தவா
வீடு அருளவே தினம் நாடி துதிக்கின்றேன்
விளங்கும் சிவயோகம் துலங்கும் சிவமயமே
(கைலை…)