கூவி அழைத்தால்
பல்லவி
கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் - குமரன்
பரங்குன்றம் ஏறி நின்று குமரா என்று
அனுபல்லவி
பூவிதழ் மலர்ந்தருள் புன்னகை புரிவான்
புண்ணியம் செய்தோர்க்கு கண்ணெதிரில் தெரிவான்
(கூவி அழைத்தால்…)
சரணம்
தேவியர் இருவர் மேவிய குகனை
திங்களை அணிந்த சங்கரன் மகனை
பாவலர் யாவரும் பாடிய வேந்தனை
பொன்மயில் ஏறிடும் சண்முக நாதனை
(கூவி அழைத்தால்…)