கோவில் முன்னே கூடி நின்று
(மத்யம ஸ்ருதி)
கோவில் முன்னே கூடி நின்று
கோடி ஜென்ம பாபம் தீர
குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கிறோம்
திருமேனி தரிசனம் நிர்மலமாகவே கண்டு
கிரிதரா உன்னை நமஸ்காரம் செய்கிறோம்
சந்தன காப்பு தரித்து
தைலம் பூசிக்கொண்டு நிற்கும்
நந்த கோபாலனே நமஸ்காரம் செய்கிறோம்
எண்ணெய் ஸ்நானம் செய்து கையில்
வாழைப்பழத்தோடு நிற்கும்
கண்ணா உன் பாதத்தில் நமஸ்காரம் செய்கிறோம்
குடம் குடமாக பாலை
அபிஷேகம் செய்யும் வேளை
கோவிந்தனே உன்னை நமஸ்காரம் செய்கிறோம்
கொண்டமயில் பீலி மின்ன
மஞ்சள் பட்டு கட்டிக்கொண்டு
குழலூதும் கிருஷ்ணா நமஸ்காரம் செய்கிறோம்
தெச்சி மந்தாரம் துளசி
தாமரை பூ மாலை சார்த்தி
அச்சுதனே உன்னை நமஸ்காரம் செய்கிறோம்
திவ்ய நாமம் சொல்லிக்கொண்டு
ஶ்ரீவேலியைச் சுற்றி வந்து
ஶ்ரீதரா உனக்கு நமஸ்காரம் செய்கிறோம்
தீராவினை தீர்த்து வைத்து
சோரும் வரம் அளித்திடும்
நாராயணா உன்னை நமஸ்காரம் செய்கிறோம்