மாதா பராசக்தி
சரணம் 1 (இராகம்: கௌரி மனோகரி)
மாதா பராசக்தி வையமெல்லாம் நீ நிறைந்தாய்
ஆதாரம் உன்னையல்லால் யார் எமக்குப் பாரினிலே
ஏதாயினும் வழி நீ சொல்வாய் எமதுயிரே
வேதாவின் தாயே மிகப்பணிந்து வாழ்வோமே
சரணம் 2 (இராகம்: சிவரஞ்சனி)
வாணி கலைதெய்வம் மணிவாக்குதவிடுவாள்
ஆணிமுத்தைப் போலே அறிவுமுத்து மாலையினாள்
காணுகின்ற காட்சியாய்க் காண்பதெலாங் காட்டுவதாய்
வானுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே
சரணம் 3
பொன்னரசி நாரணனார் தேவி புகழரசி
மின்னும் நவரத்தினம் போல் மேனி அழகுடையாள்
அன்னையவள் வையமெல்லாம் ஆதரிப்பாள் ஶ்ரீதேவி
தன்னிரு பொற்றாளே சரண்புகுந்து வாழ்வோமே
சரணம் 4
மலையிலே தான்பிறந்தாள் - சங்கரனை மாலையிட்டாள்
உலையிலே ஊதி உலகக் கனல் வளர்ப்பாள்
நிலையில் உயர்த்திடுவாள் - நேரே அவள்பாதம்
தலையிலே தாங்கித் தரணிமிசை வாழ்வோமே!!