மயில் மீது விளையாடும்
பல்லவி
மயில் மீது விளையாடும் வடிவேலனே..
முருகனே
உனை மனமார நினைப்பவர்க்கு அருள் பாலனே
(மயில் மீது)
அணு பல்லவி
கயிலை வாழ் ஜெகதீசன் மைந்தனே கந்தனே
கலங்காது எனை காக்கும் கருணாகரனே
(மயில் மீது)
ஸ்வரம்
த ப த க ப த
க த ப த க ப த
ச த ப த க ப த
ச த ச த ச ப த ச
க ப த ச
ரி க ப த ச
க ரி | ப க | த ப | ச த
(மயில் மீது)
சரணம்
ஒரு நாளும் ஒரு தரமேனும்
குமரா என்றழைப்பவர்க்கு
கர்ம வினை கலைந்திடுவாய் கார்த்திகேயனே
அருள் வாரி சொரிகின்ற அவதாரனே
அருணகிரி பாவில் வந்த பாலமுருகனே
ஸ்வரம்
த ப த க ப த
க த ப த க ப த
ச த ப த க ப த
ச த ச த ச ப த ச
க ப த ச
ரி க ப த ச
க ரி | ப க | த ப | ச த
(மயில் மீது)
மயில் மீது..
வண்ண மயில் மீது..
தோகை மயில் மீது விளையாடும் வடிவேலனே