நானொரு விளையாட்டு பொம்மையா

நானொரு விளையாட்டு பொம்மையா
ஜகன்நாயகியே உமையே உந்தனுக்கு
(நானொரு…)

நானிலத்தில் பல பிறவியெடுத்து
திண்டாடினது போதாதா - தேவி
(உந்தனுக்க்கு நானொரு…)

அருளமுதைப் பருக அம்மா அம்மா என்று
அலறுதுவதைக் கேட்பதானந்தமா
ஒரு புகழின்றி உன் திருவடி அடைந்தேன்
திரு உள்ளம் இறங்காதா - தேவி
(உந்தனுக்கு நானொரு…)

Lists: 4-jan-2026