நீ இரங்காயெனில்
பல்லவி
நீ இரங்காயெனில் புகலேது அம்பா
நிகில ஜகன் நாதன் மார்பில் உறைதிரு
அனுபல்லவி
தாயிரங்காவிடில் சேயுயிர் வாழுமோ
சகல உலகிற்கும் நீ தாயல்லவோ
சரணம்
பாற்கடலில் உதித்த மணியே
பாற்கடலில் உதித்த திருமணியே
சௌபாக்ய லக்ஷ்மி எனை கடைக்கனியே
நாற்கவியும் பொழியும் புலவோர்க்கும்
மெய்ஞானியர்க்கும் உயர் வானவர்க்கும்
(அம்பா நீ இரங்காயெனில்…)