பதம் பணிந்து
பல்லவி
பதம் பணிந்து மலரெடுத்தோம்
பாமாலை - புகழ்மாலை
தொடுத்து உன்னை அலங்கரித்தோம்
அனுபல்லவி
உந்தன் சந்நிதி வந்து நின்றோம்
அழகு ஒளிமுக ருபம் கண்டோம்
மின்னிடும் குங்கும ஒளியில் உந்தன்
கோலம் கண்டோம்
(பதம்…)
சரணம்
காமாக்ஷி என்னும் நாமம்
நீ கொண்டாய் காஞ்சியிலே
காமகோடி மூவரையும்
நீ கொடுத்தாய் காஞ்சியிலே
நகரேக்ஷி காஞ்சி என்னும்
பெருமை தந்தாய் காஞ்சியிலே
கை பிடித்தாய் ஈஸ்வரனை
மன மகிழ்ந்தாய் காஞ்சியிலே
(பதம்…)