பேரின்ப வாய்திறந்து
பல்லவி
பேரின்ப வாய்திறந்து பேசம்மா - ஞான
பேரொளியை என் மீது வீசம்மா - அம்மா
அனுபல்லவி
சீரின்ப சுகம் எல்லாம் அருளம்மா - அம்மா
சீரின்ப சுகம் எல்லாம் அருளம்மா - துன்பம்
சேராத வாழ்வெனக்குத் தா - அம்மா
(பேரின்ப வாய்…)
சரணம்
கலங்காத வீரமனம் கொடுத்திடுவாய்
வினை தடுத்து எனைக்காத்து ஆண்டருள்வாய்
நலம் கனிந்த உன் சக்தியை நாடினேன் - அம்மா
நலம் கனிந்த உன் சக்தியை நாடினேனே - அந்த
நல்லபெயர் சொல்லி உன்னைப் பாடினேனே - அம்மா
(பேரின்ப வாய்…)