சஞ்சலம் தரலாகுமா
சித்கலாநந்தகலிகா ப்ரேமரூபா ப்ரியங்கரீ
நாமபாராயண ப்ரீதா நந்திவித்யா நடேஸ்வரீ
மித்யா ஜகததிஷ்டாநா முக்திதா முக்திரூபிணீ
லாஸ்யப்ரியா லயகரீ லஜ்ஜா லம்பாதிவந்திதா
சஞ்சலம் தரலாகுமா - தாயே
தஞ்சமென்று உன் தாள் நானடைந்த பின்னும்
நெஞ்சிலே ஏற்றுவைத்து நின்னையே பாடுகின்றேன்
அஞ்சலென வருவாயம்மா - மன அமைதியைத் தருவாயம்மா - அம்மா….
அமைதியைத் தருவாயம்மா - தாயே…
(சஞ்சலம்…)மாமதுரை மீனாக்ஷி மாகாளி பைரவி - உன்
மகிமையை உணர்ந்தேனம்மா - மன அமைதியைத் தருவாயம்மா - அம்மா….
அமைதியைத் தருவாயம்மா - தாயே…
(சஞ்சலம்…)திருவேற்காடுரையும் தேவி கருமாரி - உன்
திருவடி தொழுதேனம்மா - அம்மா…
திருவருள் தருவாயம்மா - அம்மா…
திருவருள் தருவாயம்மா - தாயே…
(சஞ்சலம்…)
காமாக்ஷி மீனாக்ஷி காசி விசாலாக்ஷி
கருணாயதாக்ஷி பரமேஸ்வரி