உருகிடுவாய் மனமே
பல்லவி
உருகிடுவாய் மனமே வேல் முருகா முருகா முருகா என்று தினம்
உருகிடுவாய் மனமே வேல் முருகா முருகா முருகா என்று தினம்
(உருகிடுவாய்…)
அனுபல்லவி
வருவாய் எனது ஞான குருவாய் ஓம்கார ஜெபம்
தருவாய் திருமாலின் மருகா ஷண்முகா என்று
(உருகிடுவாய்…)
சரணம்
சூரபத்மாசுரன் அகங்காரம் அழித்தவன்
தொண்டரை வருத்திடும் துயர்களை ஒழித்தவன்
காருண்ய விரதனாம் கலியுக வரதனாம்
கந்தனை ஶ்ரீ வள்ளி காந்தனை நீ நினைந்து
(உருகிடுவாய்…)
முருகா…